உத்தேச நலன்புரி நன்மைகள் திட்டத்தை ஜூலை முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

120 0

நலன்புரி நன்மைகளைச் செலுத்துவதற்கான உத்தேசத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2002ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்துதல் தொடர்பாக குறித்த காலப்பகுதி உத்தேச திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, நடைமுறைப்படுத்தலை ஆரம்பிக்கும் தினம், உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக செலவாகும் தொகை போன்ற விடயங்களைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு அதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், வர்த்தமானி பத்திரத்தில் வெளியிட்டு குறித்த நலன்புரிக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கமைய, நடைமுறைப்படுத்த வேண்டிய உத்தேச திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான வழிகாட்டலைப் பெற்றுக்கொள்வதற்காக விடயம்சார் நிபுணர்களுடன் கூடிய தொழிநுட்பக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, வறுமை இடைவெளியின் அடிப்படையில், நிலைமாற்றுநிலை, இடர்நேர்வுகளுக்குள்ளாகிய, வறுமை மற்றும் தீவிர வறுமைக்குட்பட்ட சமூகக் குழுக்களுக்கு நலன்புரி நன்மைகள் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நலன்புரி நன்மைகளைப் பெற்றுவருகின்ற இயலாமையுடன் கூடிய நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான வேறானதொரு நலன்புரி நன்மைகள் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச நலன்புரி நன்மைகள் திட்டத்தை ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றதுடன், அதற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை ஆண்டொன்றுக்கு 206 மில்லியன் ரூபா எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு செலுத்தல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.