தமிழ் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் சங்கத்தினர் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்று காலை உவர்மலையிலுள்ள சிறி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் கடத்தப்பட்டவரின் உறவினர்கள் சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அவ்வழியாக பதாதைகளை ஏந்தியவாறு ஆளுனர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
இதில் கையளிக்கப்ட்டு .கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளின் முடிவுகளை உடனடியாக தெரியப்படுத்துமாறும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.பயங்கர வாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.
இதில் திருகோணமலை மாவட்டத்தைச்சேர்ந்த 60ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.