கண்டிய சட்ட பிரகடனத்திற்கு திருத்தத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

96 0

கண்டிய சட்ட பிரகடனம் மற்றும் திருத்தக் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கண்டிய சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திருமணங்களின் போது விதவைகளுக்கு ஏற்படும் தீமைபயக்கும் நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பொதுவான சட்டத்தின் கீழ் விதவையொருவருக்கு உரித்தாகும் உரிமைகள் கண்டிய சட்டத்தின் கீழ் திருமணமாகிய விதவைகளுக்கும் உரித்தாகும் வகையில் ஏற்பாடுகளை வகுத்துத் தருமாறு கண்டிய சமூகத்தவர்கள் நீண்டகாலமாகக்; கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய, கண்டிய சட்டப் பிரகடனம்  மற்றும் திருத்தக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.