நாட்டின் அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து அணைக்குழு வின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது 430 அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுப்படடுள்ளதுடன் தற்போது அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் பஸ்களை சாதாரண பஸ்களாக அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரை சொசுகு பஸ்களையும் சாதாரண சேவைகளாக அல்லது சொசுகு சேவைகளாக மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரை சொகுசு பேருந்துகளை பொது சேவை அல்லது சொகுசு சேவையாக மாற்ற விரும்பும் அனைத்து பஸ் உரிமையாளர்களும்
மே 31 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.