சந்திரிக்காவின் தலைமையில் ‘பாசத்திற்காக யாத்திரை’ புதிய வேலைத்திட்டம்

101 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காலின் தலைமையில், ‘பாசத்திற்காக யாத்திரை’ எனும் தொனிப்பொருளில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் உமாசந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உமாசந்திர பிரகாஸ் இதனை தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

19 ஆம் திகதி புதன்கிழமை நாட்டின் ஜந்து முக்கியமான இடங்களில் இருந்து இந்த யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி, மற்றும் கதிர்காமம் ஆகிய இடமங்களில் இருந்து யாத்திரை ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் மத மற்றும் இனரீதியிலான உரிமைகள் மீற்படுவதாகவும் இங்குள்ள மக்கள் இலங்கையர்களாக வாழ்வது மிகவும் சவாலாக உள்ளதாக உமாசந்திர பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.