நாகபடுவானில் தொன்ம வழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு!

1140 0

பூநகரி காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூநகரி -முழங்காவில், குமுழமுனை வட்டாரங்களுக்கு இடைப்பட்ட நாகபடுவான் என்ற பாரம்பரிய கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட நாகபடுவான் அகழ்வாய்வில் வரலாற்றுப் பெறுமதிமிக்க பல சின்னங்கள் கிடைத்துவரும் நிலையில், அகழ்வாய்வுக்கு உட்படுத்தி வரும் ஒரு அகழ்வுக்குழியின் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமய வழிபாட்டு மையத்தின் வடிவம், இதுவரை இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பல்வேறு வடிவங்களில் நாக உருவங்கள் கிடைத்த போதும் பானைக்குள் இருந்த நாக உருவம் மண்ணில் நாட்டப்பட்டு அதை மூடி பானை வைக்கப்பட்டிருக்கலாம் என்பதைப் பாம்பின் வடிவம் உறுதிசெய்வதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர். பேராசிரியர் சுப்பராயலு, நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாட்டு மையம் பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனவும் இந்த நாக இன மக்களே இலங்கையில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனவும் கூறுகிறார். இதன்போது, மெய்சிலிர்க்க வைக்கும் பல நாக உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.