தாய்வான் டாம்யுவான் நகரில் சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் அதில் பயணித்த 26 பேரும் பலியாகினர்.
பேரூந்து சாரதி மற்றும் வழிகாட்டியை தவிர சம்பவத்தில் பலியான ஏனைய அனைவரும் சீன சுற்றுலா பயணிகள் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன டாலியன் பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்றவர்களே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
பேரூந்து தீப்பற்றிக் கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.