மிஹிந்தலை கல்லஞ்சிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றில் 63 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் டி.பி.சந்திரவதி என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.
வீட்டின் சமையலறையில் இருந்தபோது குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக கல்லஞ்சிய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.