கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கையில் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையர்கள் இந்தியாவுக்குச் செல்லும் சமீபத்திய முறை இதுவாகும், அங்கு தரகர்கள் மூலம் போலியான தகவல்கள் கொண்ட விசாவைத் தயாரித்து அதன் மூலம் அவர்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள்.
இதன் அடிப்படையில் நேற்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவ்வாறான மோசடியான மோல்டா வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இலங்கை இளைஞரை கைது செய்தனர்.
அவர் தனது விமான அனுமதியை முடித்த பின்னர், குடிவரவு நோக்கங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள கரும பீடத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு பணியாற்றிய உத்தியோகத்தர் இவரது கடவுச்சீட்டில் உள்ள மால்டா வீசா தொடர்பில் சந்தேகம் கொண்டு அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பிரதம குடிவரவு அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்.