பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்ட தொழிற் சங்க போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன், புது வருடக் கொண்டாட்டங்களுடன் இம்மாதம் 17ம் திகதி முதல் கடமைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தரும் ஊடகப்பேச்சாளருமான பேராசிரியர் ட்ரென்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ஸ தேனீர் விருந்துபசாரம் ஒன்றையும் வழங்கினார்.
கடந்த 3ம் திகதி முதல் மேற்படி பணிப் பகிஷ்கரிப்பு இடம் பெற்று வந்தது. மேற்படி பல்கலைக்கழகத்தின் 9 பீடங்களிலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.