பதுளை -தல்தென திறந்தவெளி புனர்வாழ்வு மையத்திலிருந்து நேற்று (17) திங்கட்கிழமை தப்பிச்சென்ற அனைத்து கைதிகளும் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்து புனர்வாழ்வு மையத்தில் இருந்து 9 கைதிகள் நேற்று திங்கட்கிழமை (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்கள் 9 பேரும் தற்போது மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்ற 9 கைதிகளில் இருவர் நேற்று காலை தல்தென காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டனர்.
ஏனைய 7 கைதிகளில் 4 பேர் நேற்று மாலை கந்தகெட்டிய பிரதேசத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை மீகுதி 3 கைதிகள் இன்று காலை புனர்வாழ்வு மையத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் இன்று காலை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.