கத்தி குத்துக்கு இலக்கான வயோதிக பெண்மணியை சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

700 0

 

கிளிநொச்சி- சாந்தபுரம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் கிளி.பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வயோதிக பெண்மணியை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வர ன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிக பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கத்தியால் குத்தியிருந்தார். இதயைடுத்து குறித்த வயோதிக பெண்ணின் மகன் காப் பாற்றியிருந்தார். இந்நிலையில் படுகாயமடைந்து கி,

ளி.பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மேற்படி வயோதிக பெண்ணை நேற்றைய தினம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வைத்தியசாலைக்கு செ ன்று நேரில் பார்வையிட்டார். இதன்போது குறித்த பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கூறு கையில் இராணுவ சிப்பாயே தன்னை கத்தியினால்

குத்தியதாக கூறியுள்ளதுடன், சாந்தபுரம் கிராமத்தை அண்டியுள்ள காட்டு பகுதியில் படையினர் காட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்துவருவதாகவும், அந்த விடயம் வெளியே தெரிந்த நிi லயில் அந்த விடயத்தை ஆடு மேய்ப்பதற்காக செல்லும் நானே சொன்னதாக கூறப்படுவதன் அடி ப்படையிலேயே இராணுவ சிப்பாய் தன்னை கத்திய

hல் குத்தியதாக கூறியுள்ளார். மேலும் தன்னை குத்திய இராணுவ சிப்பாய் தன்னிடம் 5 தடவை களுக்கும் மேல் இராணுவ சிருடையில் காட்டுக்குள் நின்று வெற்றிலை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளதுடன், குறித்த இராணுவ சிப்பாயை தன்னால் அடையாளம் காட்ட இயலும் எனவும் கூ றியுள்ளார். இந்நிலையில் அவதானமாக இருக்குமாறு

குறித்த வயோதிக பெண்மணியை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு கொண்டுள்ளதுடன் விபரங்க ளையும் பெற்று கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தை நேரில் பார்யிட்டும் உள்ளார்.