வெளியானது விசேட வர்த்தமானி !

119 0

நான்கு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி  ஜனாதிபதி செயலாளர் ஈ.எம். எஸ். பி. ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார வழங்கல், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் – விநியோகம், தபால் சேவை, சுகாதார சேவை  ஆகிய நான்கு சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியே இவ்வாறு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.