கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக இன்று பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் துஷார உப்புல்தெனிய இதனை தெரிவித்தார்.
சிறைச்சாலை மருத்துவரின் ஆலோசனைக்கமையவே பஷில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் தற்சமயம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் 15 ஆம் இலக்க அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும நிதியத்தின் முறையற்ற பயன்பாடு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.