காணாமல்போன இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்பு

106 0

காலி, நெலுவ பிரதேசத்தில் காணாமல் போனதாக  தேடப்பட்டு வந்த இரண்டரை வயது சிறுவனின் சடலம் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நெலுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெலுவ  பிரதேசத்தில் ‍நேற்று (15) சனிக்கிழமை மாலை காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் வீட்டின் அருகில் உள்ள நீரோடையில் இருந்து இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த குறித்த சிறுவன் தந்தையுடன் தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றிருந்தபோதே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் மற்றும் நூற்றுக்கணக்கான பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும், குறித்த சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை.

பின்னர், குழந்தையை யாரோ கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், இன்று வீட்டின் அருகே உள்ள நீரோடையில்  சோதனை செய்தபோது அதிலிருந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.