பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் தற்காலிகமாக அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடனுதவி வழங்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனை முகாமைத்துவம் செய்யும் விதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் இந்தியா வழங்கிய பங்களிப்பிற்கும் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.