தனது தந்தையை போத்தலினால் குத்திக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹடரெப்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, கந்தகொல்ல தம்பகஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய வைத்தியசாலை ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று முன்தினம் (14) இரவு 7 மணியளவில் உயிரிழந்தவர் மதுபானம் அருந்திய நிலையில் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை மண்வெட்டியால் தாக்க முற்பட்டபோது, அவரது மகன் போத்தலை உடைத்து, தந்தையை தாக்கியமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.