பிலியந்தலை, ஹல்பிட்ட பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள பொல்கொட ஆற்றில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கொட ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அணிந்திருந்த கறுப்பு காற்சட்டையின் இடது பக்க பொக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் சடலத்தை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிலியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.