யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தகராறில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றைய தினம் (14.04.2023) இடம்பெற்றுள்ளது.இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் சந்தேகநபர் இருவரையும் இன்று15 நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.