வியட்நாம் நாட்டை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் பச்சை ரத்தம் மற்றும் சமைத்த இறைச்சியைக் கொண்ட ‘டைட் கேன்’ எனப்படும் உள்ளூர் சுவையான உணவை உட்கொண்டார். இதனால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
அந்தப் பெண் ஹனோயின் புறநகரில் உள்ள அன் பின் கம்யூனைச் சேர்ந்தவர். மேலும் ஒட்டுண்ணிகள் அவளது தோலின் கீழ் ஊர்ந்து செல்ல தொடங்கியது. அந்த ஒட்டுண்ணி புழுக்கள் அவரது மூளைக்கும் சென்றது. இதில் அவர் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தாள்.
சாப்பிட்ட பிறகு வீட்டில் பலமுறை சுயநினைவையும் இழந்தாள். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஊழியர்கள் முதலில் அவளுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக நினைத்தனர். இருப்பினும், சில ஸ்கேன்களில் ஒட்டுண்ணி புழுக்கள் உண்மையில் அவளது தோலின் கீழ் ஊர்ந்து சென்றன. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகி அவர் முடங்கியிருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.