இலங்கையின் சர்வதேச தனியார் கடன்வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்திற்கு கடன்மறுசீரமைப்பு திட்ட யோசனையொன்றை அனுப்பிவைத்துள்ளது.
12 பில்லியன் பிணைமுறிகள் தொடர்பிலேயே இந்த யோசனையை சர்வதேச தனியார் கடன்வழங்குநர்கள் அனுப்பிவைத்துள்ளனர்
இலங்கை தனது கடனை செலுத்த முடியாதநிலையில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ள முதலாவது யோசனை இது.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக இது காணப்படுகின்றது
எனினும் கடன்யோசனைகளில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.அரசாங்க பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கருத்துகேட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனதெரிவித்துள்ள ரொய்ட்டர் குறிப்பிட்ட குழுவின் பேச்சாளரும் கருத்து கூறுவதை தவிர்த்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
தனியார் கடன்வழங்குநர்கள் குழுவில் 30 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.