உங்களைத் தவிர யாரும் உக்ரைன் போரை நிறுத்த முடியாது… நிறுத்தச் சொல்லுங்கள்: ஜேர்மன் அமைச்சர்

177 0

ரஷ்யாவிடம் உக்ரைன் போரை நிறுத்தச் சொல்லுமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.

உங்களை விட சீனா மீது வேறு யாருக்கும் இவ்வளவு தாக்கம் கிடையாது

உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்குச் சொல்லுமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock.

சீனாவைத் தவிர ரஷ்யா மீது வேறெந்த நாட்டுக்கும் ரஷ்யா மீது இந்த அளவுக்கு தாக்கம் கிடையாது என்றும் கூறியுள்ளார் அவர்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சரான Qin Gangஐ சந்தித்தபின், சீனா, உக்ரைன் போருக்கு தீர்வு காண சமிக்ஞை கொடுத்துள்ளது நல்லது என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock,

ஆனால், சீனா ஏன் இதுவரை உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் சொல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.