ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைளை அமெரிக்கா வேவுபார்த்தது என்ற விடயம் இணையத்தில் கசிந்துள்ள அமெரிக்காவின் இரகசிய இராணுவ புலனாய்வு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ரஸ்யாவின் நலன்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவராக காணப்படுகின்றார் என அமெரிக்கா கருதியுள்ளது.
அன்டோனியோ குட்டரசை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளமை அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
உக்ரைன் யுத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் என்ன கருதுகின்றார் என்பது குறித்த விடயங்கள் இந்த ஆவணங்களி;ல் காணப்படுகின்றன.
உலகஉணவு நெருக்கடிக்கு பின்னர்ரஸ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கைச்சாத்தான உடன்படிக்கை குறித்து அமெரிக்க ஆவணங்களில் பல விடயங்கள் காணப்படுகின்றன.
அந்த உடன்படிக்கையை பாதுகாப்பது குறித்து ஐநா செயலாளர் நாயகம் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றார் அவர் ரஸ்யாவின் நலன்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார் என கசிந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.