அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் ஆவணங்கள் இணையத்தில் வெளியான விவகாரம் – 21 வயது இளைஞன் கைது

94 0

அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர் மற்றும் புலனாய்வு ஆவணங்கள் இணையத்தில் கசிந்தமை தொடர்பில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவலர் உறுப்பினரான 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜக்டெய்செரியா என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆவணங்கள் கசியவிடப்படும் இணைய சட் குழுவின் தலைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு எதிராக உளவு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை ஜக்டெய்செரியாவின் வீட்டில் அதிகாரிகள் அவரை கைதுசெய்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பொஸ்டனிற்கு அருகில் உள்ள டைடன் நகரில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் ஒருவர் எவ்பிஐ அதிகாரிகளை நோக்கி கைகளை உயர்த்தியபடி செல்வதையும் அதன்பின்னர் அவரின் கரங்களில் விலங்கிடப்பட்டு அவர் வாகனத்தில் ஏற்றப்படுவதையும் படங்கள் காண்பித்துள்ளன.