ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இனறு (13) அறிவிக்கவுள்ளன.
அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானிய நிதியமைச்சகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தன.
அதன்படி அந்தந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த வசந்த கூட்டங்களில் கலந்து கொண்டு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த அறிக்கையை வெளியிடவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.