சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார்.
இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ சந்தித்தார்.
இதனிடையே, பிரதமர் நேற்றைய தினம் சிங்கப்பூர் துறைமுக செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, பிரதமர்;, தெற்காசிய வலய முதன்மை நிறைவேற்று அதிகாரி ஒங் கிம் பொங்கை சந்தித்து கலந்துரையாடியனார்.
இலங்கையின் துறைமுக அபிவிருத்தி, நவீனமயப்படுத்தல், தொழில்நுட்பம் ஆகிய உதவிகளை வழங்க சிங்கப்பூர் துறைமுக அதிகார சபை தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையை புனரமைப்பதற்கான ஆய்வுகளை தற்சமயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெற்காசிய வலய முதன்மை நிறைவேற்று அதிகாரி ஒங் கிம் பொங் சுட்டிக்காட்டியுள்ளார்.