சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு கடலில் பயணம் செய்தபோது அவரது காமிரா கடலில் விழுந்து மூழ்கியது.
சமீபத்தில் அந்த காமிரா குல்தோல்மன் தீவில் கரை ஒதுங்கி கிடந்தது. அதை லாஸ்மோஸ் பெர்க் கண்டெடுத்தார். பின்னர் அதுகுறித்து ‘பேஸ்புக்‘ இணையதளத்தில் அதன் போட்டோ, ‘மெமரிகார்டு’ குறித்த விவரங்களை வெளியிட்டார். அதற்கு ‘லாஸங்ட் அட் சீ’ (கடலில் தொலைந்து போனது) என பெயரிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு பிறகு அதை அறிந்த அடீல் டேவன்ஷிர் குல்சோல் மெனை தொடர்பு கொண்டு காமிராவை திரும்ப பெற்றார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு தனது காமிரா திரும்ப கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் அதை பத்திரப்படுத்தி காட்சி பொருளாக வைத்து பாதுகாத்து வருகிறார்.