தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி நிதியத்தில் இருந்து 805 இலட்சம் ரூபாவை மிகவும் சிரமமான நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு செலவிடுவதை விட்டு இந்தத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக அவர் கூறுகிறார்.
அத்துடன், பதவி உயர்வு பெற்று ஏறக்குறைய 28 வருடங்களாக பணிபுரியும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தவிர்த்து வருவதாக தேசிய அமைப்பாளர் கூறுகிறார்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சமுர்த்தி வங்கிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்பட்டு ‘சுப நேர’ பரிவர்த்தனைகளில் இருந்து விலகுவதாக அவர் மேலும் கூறுகிறார்.