உண்டியல் முறை மூலம் பணம் வசூலித்தவர்கள் கைது!

81 0

சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறை மூலம் 82 இலட்சம் ரூபாவை வசூலித்ததாகக் கூறப்படும் இருவர் கொழும்பு – டேம் வீதியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும்இ வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.