நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

109 0

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.