ஜோர்தானில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 15 தீவிரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு அம்மான் நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், உளவுத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொல்லப்பட்ட தாக்குதல், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நஹித் ஹத்தாரின் படுகொலை ஆகிய தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களே மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைய ஜோர்தானில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு அந்த நாட்டு மன்னர் அனுமதியளிப்பதை தவிரத்துவந்தார்.
எனினும் ஜோர்தானில் குற்றங்கள் அதிகரித்துவருவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு மீண்டும் மரணதண்டனை அமுல்படுத்தப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இரண்டுவருடங்களின் பின்னர் இன்று 15 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.