ஆவணங்கள் மூலம் உரிமையை உறுதிப்படுத்தியவர்களுக்கு 54 காணிகள்; கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்விற்கு முன்பு இந்த காணிகளை உடமை கொண்டிருந்த ஏனையயவர்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது
எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் காணி உரிமை கோரியவர்களில் 30 பேரிடம் உரிய காணி அனுமதிப்பத்திரங்கள் இருக்கவில்லை.
அவர்கள் இடம்பெயர்விற்கு முன்பு இந்த காணிகளில் உடைமை கொண்டிருந்தவர்கள் என்ற வகையிலும் அங்கு நிலவிய சூழ்நிலை காரணமாக காணி உரிமைப் பத்திரங்களை பெற முடியாது போனமையினாலும் அவர்களும் அந்த காணிகள் வழங்கப்படுவதற்கு உரித்துடையவர்களே என எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணியை விடுவிக்குமாறும் எதிர்கட்சித் தலைவர் கேரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன்; முல்லைத் தீவில் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கு சம்பந்தன் ஜனாதிபதிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.