அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கையாக இருக்கின்றது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பலபிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போது இலங்கை அரசாங்கம் பாரிய கடன் சுமையினில் இருப்பதால் சில தொழிற்சாலைகள் மற்றும் சில இடங்களை தனியாருக்கு வழங்கியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் நல்லாட்சி அரசாங்கமானது அனைத்து வளங்களையும் வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வது வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலும், இந்த நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.