அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் மஹகல்கடவல சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பஸ்களும் லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 37 பேர் காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த 06 பேர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலை பஸ் சாரதி மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.