கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர், வீட்டில் பிரசவித்த ஆண் சிசுவை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்துக்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி, மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சம்பவம் வைத்தியர்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.