வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் 17663 டெங்கு நோயாளர்கள்

254 0

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களிலும் 17 ஆயிரத்து 663 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் அது நூற்றுக்கு 43 சதவீதமாகும்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டு முன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.