ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி: முன்னாள் பாதுகாவலர்

93 0

 ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என்று அவரது முன்னாள் பாதுகாவலர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

க்ளெப் கரகுலோவ் என்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய உயரடுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு சேவையில் அதிகாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தனது பணியை ராஜினாமா செய்த க்ளெப் தனது குடும்பத்துடன் ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் அவர் புதினை பற்றி வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். தனது செயல் ரஷ்யர்களை பொதுவெளியில் வெளிப்படையாக பேச வைக்கும் என அவர் நம்புகிறார்.

சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய க்ளெப்,” நமது ஜனாதிபதி ஒரு போர்க் குற்றவாளியாகிவிட்டார். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்பட வேண்டிய நேரம் இது. உங்களுக்கு தெரியுமா? புதின் தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்த மட்டார். புதின் இப்போது விமானங்களைத் தவிர்க்கிறார். தற்போது சிறப்பு கவச ரயிலில் பயணம் செய்வதைதான் புதின் விரும்புகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய போரால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிட்டு வரும் ஜெலன்ஸ்கி, யாகித்னே என்ற கிராமத்தை பார்வையியிட்ட பின்னர், ”ரஷ்ய அதிபர் புதினும் வரும் காலங்களில் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார் என நம்புகிறேன்” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதினின் முன்னாள் பாதுகாவலர் அவரை போர்க் குற்றவாளி எனத் தெரிவித்திருக்கிறார்.