ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் அத்துருகிரிய பிரதேசத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “அத்துருகிரியகே ஜெரம்” என்பவர் விசேட அதிரடிப்படையினரால் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அங்கொட லொக்காவின் பிரதான சகா என்றும், அவர் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும், அவர் அத்துருகிரிய நகரில் தங்கியிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நேற்று (05) கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.