மாணவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் கல்வி நிலையங்களாக மாறவேண்டும்!

86 0

மாணவர்கள் இருக்கும் இடங்கள் எல்லாம்  கல்விநிலையங்களாக மாறவேண்டும் இதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் உதவ வேண்டும்  என வலிகாம வலய கல்வி பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்.வடலியடைப்பு சைவபிரகாச வித்தியாசாலை சேவைநலன் பாராட்டு விழாவும் பிரிவுபசார விழாவும் தரம் ஐந்து மாணவர்கள் கெளரவிப்பு விழாவும் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

இடமாற்றம் இயல்பானது ,சிலர் ஆரம்பத்தில் எந்த பாடசாலையில் நியமனம் பெற்றார்களோ அந்த பாடசாலையிலே  ஓய்வையும் பெற்றுக்கொள்கிறார்கள். அத்தகையவர்களுக்கு அந்த பாடசாலையையும் அந்த பாடசாலை சூழ்நிலை மாணவர்களையும்தான் தெரியும்.

ஆனால்  வேறு இடங்கள் மாவட்டங்கள் மாகாணங்களில் இடமாற்றங்கள் பெற்று செல்லும் ஆசிரியர்கள் பலவற்றை அறிந்து கொள்கிறார்கள்.  இதற்கு உதாரணமாக இராணுவத்தினர் இராணுவ நடவடிக்கைகளுக்காக  கிராமங்களுக்குள் நடமாடியதால் விசாரணைகளை மேற்கொண்டபோது இடமாற்றங்களை சந்தித்த ஆசிரியர்கள் சிங்கள மொழியை கற்றுக்கொண்டதால் இராணுவ நடவடிக்கையின் போது பலரை காப்பாற்றிய சம்பவங்கள் இடம்பெற்றது.

இடமாற்றங்கள் பல வாய்ப்புகள், தொடர்பாடலை ஏற்படுத்தி தரக்கூடியது ஆசிரியர்கள் தமது தகுதியை வளர்த்துக்கெள்ள கூடியதாக உள்ளது.

சரியானவற்றுக்கு சரியான முறையில்  நேரத்தை செலவு செய்தவர்களே  வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். மாணவர்கள் காலை வேளையில் நேரத்திற்கு எழுந்து கல்விகற்க வேண்டும். மாலையில் விளையாட்டுக்கும்நேரம் ஒதுக்கவேண்டும்.  இன்றைய காலத்தில் பிள்ளைகள் விளையாட முடியாதவர்களாக ஆரோக்கிய மற்றவர்களாக  இருக்கிறார்கள். பல பிள்ளைகளுக்கு கிட்டி புள்ளு ,பேணி பந்து போன்ற ஆரம்பகால விளையாட்டுகள் அறிந்திராதவர்களாக இருக்கிறார்கள்.

பிள்ளைகள் பலவற்றை இழந்துள்ளார்கள். தோல்வியை தாங்கும் மனபக்குவப்படும் மனம் வேண்டும்.  பிள்ளைகளை சரியானபாதையில் நடாத்துங்கள். அப் போதுதான்  சமூகத்தில் பண்புள்ள மனிதர்களாக வாழ்வார்கள்.

எனவே மாணவர்கள் உள்ள இடங்கள் அனைத்தையும் கல்விநிலையங்களாக மாற்றி அவர்களை சிறந்த கல்விமான்களாக்குங்கள். இதுவே சமுதாயத்தில் நிகழும் சமூக ஒவ்வாமையை தவிர்க்கும். இன்றைய நிகழ்வில் ஒய்வுபெறுபவர்கள்,இடமாற்றம் பெறுபவர்கள் பாராட்டுபெறுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இந்த வித்தியாசாலை மேலும் வளர்ச்சிபெற உதவிகளை கிடைக்க வாழ்த்துக்கள் என்றார்.