யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளும்போது முதியவரொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (5) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதில் முத்துக்குமார் அப்புத்துரை என்ற 73 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும்போதே தவறி விழுந்து உயிரிழந்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.