கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியில் மூன்றாம் பகுதியில் உள்ள சரவனாஸ் பாலம் அதன் அத்திபாரம் இடிந்து வீழ்ந்த நிலையில் ஆபத்தானதாக காணப்படுகிறது.
இரணைமடு குளத்தின் இடது கரை பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் திருவைாறு வில்சன் வீதியையும் மூன்றாம் பகுதியையும் இணைக்கும் பாலம் இடிந்து விழும் நிலையில் தற்போது காணப்படுகிறது.
விவசாய கிராமமான திருவையாறு பிரதேசத்திலிருந்து ஏனைய பகுதிகளிக்கு உழவு இயந்திரங்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் தினமும் தங்களுடைய நாளாந்த நடவடிக்கைகளுக்காக தற்போதும் குறித்த பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குறித்த பாலம் எவ்வேளையிலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
குறித்த பாலம் இரணைமடு குள புனரமைப்பின் ஒரு பகுதியான இபாட் திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களுக்கு முன் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டது. என்றும் ஆனால் புனரமைப்பின் போது மேலோட்டமாக பூசி மெழுகி புனரமைப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டனர் என்றும் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த பாலத்தின் ஆபத்தின் விபரீதத்தை புரிந்துகொண்டு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் அவசர கோகரிக்கையை விடுத்துள்ளனர்.