பதுளை தெமோதரை, பல்லகெடுவ, மாவெலகம பிரதேசத்தில் வயோதிப தம்பதியர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பலகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலையை உயிரிழந்த தம்பதியின் பேரன் செய்துள்ளதாகவும், அவர் தற்போது அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
75 மற்றும் 68 வயதுடைய தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (4) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.