பாராளுமன்ற பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் மீட்கப்பட்ட சடலம்!

113 0

தலங்கம கிம்புலஎலே பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், கறுப்பு நிற நீண்ட கால்சட்டையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்று தவறி வீழ்ந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.