குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்படவேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்iகை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம குழுக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (04) செவ்வாய்க்கிழமை யாழ் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
சுற்றுச்சூழல்தொடர்பில் தற்போது அதிகளவாக கதைத்து வருகின்றோம் ஆனால் எம் கண்முன்னே குறிப்பாக குடாக்கடல் நீரேரிப் பகுதியில் கடல் அட்டைப் பண்ணைகள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டு கடலின் வளங்கள் வெளிநாட்டினால் சூறையாடப்படுகின்றது அது மட்டுமன்றி கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.
பருவ காலத்தில் இந்தக் கடற்கரையைத் தேடிவருகின்ற மீனினங்கள் உற்பத்திக்காக இப்பகுதிகளுக்கு வராத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலை தொடருமாயின் குடாக்கடலை நம்பி வாழும் தொழிலாளர்கள் தமதுதொழிலைமுற்று முழுதாக இழக்க நேரிடும் கடல் அட்டைப் பண்ணைகளினால் இலாபம் வரும் என்பதற்காக குடாக்கடலை நம்பியுள்ளதொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு யார் உதவி செய்வது கடல் அட்டையை இலங்கையில் எவருமே பயன்படுத்துவதில்லை.
அவ்வாறுள்ள நிலையில் வெளிநாட்டின் லாபத்திற்காக இந்தத் தொழில் முறையைச் செய்து இலாபம் ஈட்டுவது யார் இலாபத்தை ஈட்டுவதாயின் அதற்கானதொழிலார்கள் பங்குபற்றுதல் முக்கியமானது எனவே பழக்கம் இல்லாத சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தொழில் முறையைத் தவிர்த்து சூழலுக்கு ஏற்ற தொழில் முறையைச் செய்வதற்கு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கரையோரம் பேணல் மூலவளத்திணைக்களம் மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களங்கள் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.