சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கைதின் போது கடற்றொழிலாளர் ஒருவர் தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் , அவர் சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.