முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

285 0
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான  19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன்  ஆகியோர் குறித்த காணிகளை இராணுவத்திடமிருந்து  பொறுப்பேற்று பொதுமக்களிடம் கையளித்துள்ளனர்.
குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், அந்தக் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.