மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டதுவன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பத்தடுவன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதனையடுத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.