பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என பெங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,மக்களின் தேவைக்கு அமைய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை, பிரிவினைவாத சக்திகளின் தேவைகளையே அரசாங்கம் பூர்த்தி செய்து வருகின்றது.தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் இலங்கை இரண்டாக பிளவடைவதனை எவராலும் தடுக்க முடியாது.
இலங்கையில் இல்லாமல் போய்வரும் பௌத்த ஒழுக்க விழுமியங்களை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் மலர்ந்துள்ளது.ஊனமுற்ற படைவீரர்கள் உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த காலங்களில் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டோரை தேசப்பற்றாளர்கள் என அறிவித்து நிகழ்வு நடத்துவது பொருத்தமற்றது என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.