வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மனு ஜூன் முதலாம் திகதி விசாரணைக்கு!

224 0

பயங்கரவாத  தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்துக்கு  எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஜூன் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி வசந்த முதலிகே நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  டிலான் ரத்நாயக்க, நீதிமன்றத்தில்  வாதங்களை முன்வைத்தார்.

அதன்படி,  இம்மனுவை ஜூன்  முதலாம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.