இத்தாலி நாட்டின் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் உறைந்து கிடக்கும் பனியை கண்டு ரசிக்க ஏராளமான உள்நாட்டினர் வருகை தருவதுண்டு. இப்பகுதியில் உள்ள செங்குத்தான மலை முகடுகள் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களை கவர்ந்திழுப்பதால் வெளிநாடுகளை சேர்ந்த பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்கள் இங்கே பயிற்சிக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இரு மலைகளை இணைக்கும் தொடரின் அருகே வழக்கம்போல் நேற்றும் சிலர் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் திடீரென பலத்த வேகத்துடன் திடீரென காற்று வீச தொடங்கியது.
இதனால் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். பலியான மூவரில் ஒருவர் இத்தாலி நாட்டவர் என்றும் மீதி இருவர் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி நாட்டினர் என்றும் தெரியவந்துள்ளது.